மூன்றில் ஒரு பெண் மெனரேஜியா என்ற அதி தீவிர இரத்தப் போக்கால் அவதிப்படுகிறார். அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் அடிப்படைச் சோகம் என்னவெனில்பெரும்பாலானோர்க்கு தாம் இக்குறைபாட்டால் அவதிப் படுகிறோம் என்பதே தெரிவதில்லை. “என் அம்மாக்கும் இப்படித்தான். என் அக்காவிற்கும் கூட அப்படித்தான். எங்கள் பரம்பரைக் கூறு இது” என்று பெரும்பாலான பெண்கள் இதைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உண்மையில் நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.மாதா மாதம் வருகின்ற பிரச்சினைதானே என்று அலட்சியம் காட்டினால் இரத்தச் சோகை போன்ற பல்வேறு நோய்களை இது வரவழைக்கும். இறுதியில் கர்ப்பப்பையையே எடுக்கக் கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.
எனவே, இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள
பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர். P. நர்மதாM.B.,B.S., DNB (OG)அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
டாக்டர். P. நர்மதா M.B.,B.S., DNB (OG) அவர்கள் தமது M.B.,B.S. கல்வியை கோவை மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். மேலும் பட்டய மேற்படிப்பாக பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு நலம் ஆகியவற்றில் DNB படிப்பை கோவை GKNM மருத்துவமனையில் பயின்றவர். கோவை கங்கா மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு நலப் பிரிவில் மருத்துவராக தனது சேவையினைப் புரிந்து வருகிறார். பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு துறையில் ஆழ்ந்த அறிவும் நிறைந்த அனுபவமும் பெற்றவர். மேலும் தொடர்புக்கு:
விமன் வெல்நெஸ் கிளினிக் ,
குமார் காம்ப்ளக்ஸ்,
மருதமலை மெயின் ரோடு,
திருமுருகன் நகர்,
கோவை – 641 041
போன்: 0422 – 4342185
டாக்டர், அதி தீவிர இரத்தப் போக்குப் பற்றிக் கூறுங்களேன்?
அதி தீவிர இரத்தப் போக்கு பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கைக் குறிப்பதாகும். இதை நாங்கள் மெனரேஜியா என்கிறோம். மெனரேஜியா என்பது ஒவ்வொரு மாதமும் அதிகமான இரத்தப் போக்கு ஏற்படுவது. சில சமயங்களில் ஏழு நாட்களுக்கும் மேல் இரத்தப் போக்கு ஏற்படும். இன்னமும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே நீங்கள் உங்கள் சானிடரி நாப்கின்னை மாற்ற வேண்டிய சூழல் இருந்தால் அது மெனரேஜியாவாக இருக்கலாம். அந்நிலையில் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்தே ஆக வேண்டும்.
டாக்டர், எந்த வயதில் பெண்களுக்கு இப்பிரச்சினை ஏற்படலாம்?
மெனரேஜியா எந்த வயதிலும் ஏற்படலாம். வளர் பருவத்தினர் அதாவது அடலசன்ஸ் வயதில் உள்ளவர்களிடையே அல்லது ஒழுங்கற்ற கால அளவில் மாத விடாய் ஏற்படும் பெண்களிடையே இது அதிகளவில் காணப் படுகிறது.
டாக்டர், பொதுவான விஷயம் என்னவெனில் பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் மெனரேஜியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே தெரிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் நாம் மெனரேஜியாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதைஎவ்வாறு அறிவது?
உண்மை தான். பெரும்பாலான பெண்கள் இதை அலட்சியப் படுத்தி விடுகிறார்கள். உண்மையில் நாம் அக்கறை கொள்ள வேண்டிய விஷயம் இது. கீழ்க்கண்ட பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள்:
- ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் பேடை மாற்ற வேண்டியதிருக்கிறதா?
- மாதவிடாயின் போது இரட்டைப் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்கிறீர்களா? உதாரணமாக எக்ஸ்ட்ரா லார்ஜ் பேடை உபயோகிப்பது.
- இரவு நேரங்களில் உங்கள் பேடை மாற்றியே ஆக வேண்டியதிருக்கிறதா?
- ஒரு வாரத்திற்கும் மேலாக இரத்தப் போக்கு உள்ளதா?
- மாதவிடாயின் போது இரத்தம் கட்டியாக வெளியேறுகிறதா?
- மாதவிடாயின் போது உங்களின் அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் இருக்கிறதா?
- இரத்தச் சோகை போன்று அல்லது மிகவும் களைப்புடன் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருக்கிறதா?
இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னால் நீங்கள் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
டாக்டர், மெனரேஜியாவிற்கு என்ன காரணம்?
இதை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
- கர்ப்பப்பை சம்பந்தமான காரணங்கள்
- ஹார்மோன் சமநிலை இழப்பதால் ஏற்படும் காரணங்கள்
- வேறு நோயினால் ஏற்படும் காரணங்கள்
கர்ப்பப்பை சம்பந்தமான காரணங்கள்:
- கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகளினால் அதிக இரத்தப் போக்கு ஏற்படலாம்.
- கர்ப்பப்பை புற்றுநோய் அல்லது கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (செர்வைகல் கேன்சர்) போன்றவற்றால் மெனரேஜியாஏற்படலாம்.
- சில வகையானகுடும்பக் கட்டுப்பாட்டு முறைகளினால் ஏற்படலாம். குறிப்பாக கர்ப்பப்பைக்குள் வைக்கப்படும் IUD போன்ற குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்
- கருச்சிதைவு, குழந்தை கருப்பையில் வளராமல் போகும் போது ஏற்படும் “இடம் மாறிய கருவளர்ச்சி” போன்றவற்றாலும் அதிகமான இரத்தப் போக்கு ஏற்படலாம்.
ஹார்மோன்கள் சமநிலை இழப்பதால் ஏற்படும் காரணங்கள்:
வயதிற்கு வந்த முதல் மாத விடாயிலிருந்து மாத விடாய் நிற்கும் காலம் வரையிலும் நமது ஹார்மோன்களில் அதிகமான மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இந்த மாறுபாட்டின் காரணமாகவும் அதிகமான இரத்தப் போக்கு ஏற்படலாம்.
வேறு நோயினால் ஏற்படும் காரணங்கள்
இரத்த சம்பந்தமான நோய்களும் இதற்கு காரணமாகின்றன. தவிரவும், கல்லீரல், சிறுநீரகம் அல்லது தைராய்டு கோளாறுகள் பெல்விக் (PELVIC) பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவையும் காரணமாகின்றன.
பயப்படாதீர்கள். நவீன மருத்துவத்தில் ” மெனரேஜியாவை ” எளிதில் குணப்படுத்த முடியும். தேவை கொஞ்சம் கவனமும் விழிப்புணர்வும் மட்டுமே.
டாக்டர், இதற்கு ஏதாவது பரிசோதனை முறைகள் உள்ளனவா?
பரிசோதனைக்கு முன்பு உங்கள் மருத்துவர் உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்பார். உதாரணமாக, உங்களுக்கு எந்த வயதில் முதல் மாத விடாய் ஏற்பட்டது, உங்களுடைய மாத விடாய் நாட்களின் இடைவெளி, மாதவிடாயின் போது எவ்வளவு நாட்கள் உங்களுக்கு இரத்தப் போக்கு இருக்கும், இந்த நாட்களில் எவ்வளவு நாட்கள் அதிகமான இரத்தப் போக்கு இருந்தது, ஒவ்வொரு மாதமும் இது உங்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது,உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இவ்வாறு உள்ளதா என்பதை அவர் கேட்டறிவார். இதற்குப் பிறகு அவர் சில பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.
இதில் முக்கியமானது இரத்தப் பரிசோதனை. இதன் மூலம் நமக்கு இரத்தச் சோகை , தைராய்டு தொந்தரவுகள், இரத்தம் உறைவதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது, பாப் டெஸ்ட் (PAP TEST). இது கர்ப்பப்பை வாயில் செய்யப்படும் பரிசோதனை. இதன் மூலம் நோய தொற்று, வீக்கம் அல்லது செல்லில் (CELL) ஏற்படும் மாற்றம் போன்றவைகளை அறியலாம்.
மூன்றாவது கர்ப்பப்பை சவ்வு திசுப் பரிசோதனை (ENDOMETRIAL BIOPSY).இப்பரிசோதனைக்காக உங்கள் கர்ப்பப்பையின் உள்புற சவ்விலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு ஆராயப் படுகிறது. வலி அவ்வளவாக இருக்காது.
நான்காவதாக, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை. இது வலியில்லாத பரிசோதனை முறை. ஒலி அலைகள் மூலம் இரத்தக் குழாய்கள், இரத்தத் திசுக்களில் ஏற்படும் பிரச்சனைகளை அறியலாம்.
இவை அடிப்படையான பரிசோதனை முறைகள். தேவைப்படின் மேலும் சில பரிசோதனைகளை அவர் பரிந்துரைப்பார்.
இதில் முக்கியமானது:
- சோனா ஸிஸ்டோ கிராம் – இது கர்ப்பப்பையின் உள்புற சவ்வில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்று அறிய ஒலி அலைகள் மூலம் பெறப்படும் பரிசோதனை முறை. பரிசோதனையின் போது மிதமான வலி ஏற்படலாம்.
- ஹிஸ்டரியோகோபி - கர்ப்பப்பையின் உள்புறம் ஏதாவது கட்டிகள் (FIBROID) போன்று அல்லது ஏதாவது வளர்ச்சி உள்ளதா ( POLYP) என்று அறிய ஒரு சிறிய கருவி மூலம் செய்யப்படும் பரிசோதனை இது.
- டி அண்ட் ஸி (D & C )
டாக்டர், இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?
இதற்கான சிகிச்சை முறையை உங்கள் மருத்துவர் உங்களின் இரத்தப் போக்கு அளவு, அது எவ்வளவு தீவிரமானது என்பதை பொறுத்து முடிவு செய்வார். தவிரவும், உங்களின் வயது, உடல் நலம், மருத்துவ வரலாறு போன்றவற்றையும் அவர் கவனத்தில் கொள்வார். இதில் முக்கியமானது உங்களின் தேவையையும் உங்களின் விருப்பமும். உதாரணமாக, சில பெண்கள் மாத விடாய் நிற்பதை விரும்புவர், சில பெண்கள் இரத்தப் போக்கின் அளவு குறைந்தால் போதும் என்று விரும்புவர், சில பெண்களுக்கு மேலும் குழந்தைப் பேறு தேவைப் படலாம். சிலருக்கு வலி குறைந்தால் மட்டும் மட்டும் போதும் என்று நினைப்பார்கள். இவைகளை கவனத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொள்ளலாம். சிலருக்கு தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படலாம். சிலருக்கு ஒரே முறையிலேயே சிகிச்சை முடிந்து விடும். இதைப் பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் விவரமாகக் கூறுவார். உங்களுக்கு எது தேவை என்பதை உங்களுடன் கலந்து பேசி அவர் முடிவெடுப்பார்.
இதில் மருந்து உட்கொள்ளும் சிகிச்சை முறை, அறுவை சிகிச்சை முறை என்று இரண்டு வகை உண்டு. மருந்து உட்கொள்ளும் முறையில் இரும்புச் சத்து மாத்திரைகள், வலி நிவாரணிகள் , குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகள்,மாதவிடாய் சீராய் வருவதற்கு சில குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் போன்றவைகள் பின்பற்றப்படுகின்றன.
அறுவை சிகிச்சை முறையில் டி அண்ட் ஸி , கர்ப்பப்பை நீக்கம் போன்றவை மேற்கொள்ளப்படலாம். இவையெல்லாம் பொதுவான முறைகள் தான். இதைப் பற்றி முடிவு செய்வது உங்கள் மருத்துவர் தான்.
டாக்டர், மெனரேஜியாவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பொதுவான அறிவுரைகள்?
இது பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் நிறையப் பெண்களுக்கு தாங்கள் மெனரேஜியாவிநால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பதே தெரிவதில்லை. எனவே தொடர்ச்சியான கண்காணிப்புதான் இதற்கு முதல் படி. குறிப்பிட்ட கால் அளவில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இரும்புச் சத்து மாத்திரைகளை உங்கள் டாக்டரின் வழிகாட்டுதலின் படி எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே குறிப்பிட்டபடி நவீன மருத்துவத்தில் மெனரேஜியாவை எளிதில் குணப்படுத்தலாம். பயப்படாதீர்கள்.

Coin Casino Review: Top Sites, Games & Bonuses
பதிலளிநீக்குLearn 인카지노 all about หาเงินออนไลน์ the Coin Casino and start earning real money playing online casino games. ✓ Learn septcasino how to play the most popular casino games.