வெள்ளி, நவம்பர் 14, 2014


டாக்டர் சொல்வதைக் கேளுங்க!
மனசை ஜாலியா வச்சுக்குங்க!!
tunnel_wide-d4b8f634e40e113dc68ea83806d748c1c6c320e1-s40-c85
” மச்சி , ஒரு க்வாட்டர் சொல்லேன், செம டென்ஷனா இருக்கு” என்று நமதுநண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். பள்ளி செல்லும் குழந்தைகள் கூட,
” அம்மா, ஒரே டிப்ரஷனா இருக்கும்மா”  என்று சொல்கிறார்கள். ” ஓவர் ஸ்ட்ரெஸ்சார், வேலையே செய்ய முடியல” என்று நமது சக பணியாளர்கள் சொல்வதையும்கேட்கிறோம். டென்ஷன், ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற மன நலன் சார்ந்தவார்த்தைகளை நமது தினசரி வாழ்க்கையில் கலந்து கட்டிப் பயன்படுத்துகிறோம்.
ஆனால்உண்மையில் ஒவ்வொரு வார்த்தையும் வெவ்வேறு விதமான பொருளைக்கொண்டிருக்கிறது. பொதுவாக மனநலன் சார்ந்த புரிதல் நம்மிடையே குறைவாகவேஉள்ளது. இதன் பொருட்டு தெளிவு பெறுதல் பொருட்டு    கோவை,மசக்காளி பாளையத்தில்  உள்ள ” ஸ்ரீநிவாச மருத்துவமனை” யைச் சார்ந்த டாக்டர். K.ரெகுநாதன் M.B., B.S., D.P.M., மனநல மருத்துவர்அவர்களை சந்தித்தோம்.
Ragunathanதிரு. டாக்டர்.ரகுநாதன்  அவர்கள் தனது M.B.,B.S., மருத்துவப் படிப்பை திருநெல்வேலி  மருத்துவக்கல்லூரியில் படித்தவர்.  மணிபால்  கஸ்தூரிபாமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மன நலமருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர். மனநல மருத்துவத்திலும் குடிபோதை மீட்பு சிகிச்சையிலும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார்.தற்போது மது, போதைப் பொருள்கள் மீட்பு மையத்தை கோவை, மசக்காளிபாளையத்தில்உள்ள “ஸ்ரீனிவாசா மருத்துவமனையில்” நடத்தி வருகிறார்.  மேலும் தொடர்புக்கு :  ஸ்ரீ நிவாஸ் ஹாஸ்பிடல், எண் 6, முல்லை நகர், மசக்காளிபாளையம், கோயம்புத்தூர்- 641 015  போன்: 0422-2574439, 2594439.
அவருடன் உரையாடியதிலிருந்து சில பகுதிகள்.
மனநலன்சார்ந்த வார்த்தைகளைநாம் பொதுவாகப் பயன் படுத்துகிறோம். அது தவறு.உதாரணமாக  டென்ஷன்என்பது மன இறுக்கம்,  எரிச்சலான மன நிலை, வெளிப்படுத்தப் பட முடியாத கோபம் போன்றவைகளைக் குறிப்பது.ANXIETYஎன்பது மனப்பதட்டத்தைக் குறிப்பது.ஸ்ட்ரெஸ்என்பது மன அழுத்தத்தைக் குறிப்பது. இவைகளைமனக் குறைபாடுகள் (MENTAL DISORDER) எனலாம்.
ஆனால் டிப்ரஷன் (DEPRESSION) என்பது மன சோர்வைக் குறிப்பது. இதை மன வருத்த நோய் அல்லதுமனத் தளர்ச்சி என்று குறிப்பிடலாம்.  கவனியுங்கள், இது ஒரு நோய்.
ஜாதி, மதம், ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், ஆப்ரிக்காக்காரர், அமெரிக்காக்காரர்என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அநேகமாக உலகம்முழுவதும் ” டிப்ரெஷன் ” காணப் படுகிறது.
டிப்ரஷனில்  மூன்று வகையான நிலைகள் அல்லது கட்டங்கள் உள்ளன.
  • சாதாரண மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Mild Depressive Episode)
  • மிதமான மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Moderate Depressive Episode)
  • தீவிர மனச் சோர்வு கட்டம் அல்லது நிலை (Severe Depressive Episode)
இந்நோய்க்கான  அறிகுறிகள்:
dep
  1. எப்போதுமே சோகத்துடன் இருப்பது
  2. உடல் ரீதியாக சோர்ந்திருப்பது
  3. எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது
  4. எதிலும் நம்பிக்கையில்லாமல் இருப்பது
  5. நம்மால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்று எண்ணுவது அல்லது யாராலும் எனக்கு உதவ முடியாது என்று எண்ணுவது
  6. தாம் எதற்குமே லாயக்கில்லை என்று எண்ணுவது
  7. தற்கொலை எண்ணம் அல்லது அதைப் பற்றி பேசுவது,யோசிப்பது
  8. எப்போதுமே பதட்ட நிலையில் இருப்பது
  9. அகால் நேரத்தில் விழித்துக் கொண்டிருப்பது
  10. தனக்குள்ளே சுருங்கிக் கொள்வது அல்லது மூர்க்கமாக நடந்து கொள்வது
  11. எதிலுமே சந்தேகப்படுவது குறிப்பாக,தனது வாழ்க்கைத்துணையை
  12. செக்ஸில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் 
  13. மகிழ்ச்சியான தருணங்களில்,நிகழ்ச்சிகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ள முடியாமை
காரணங்கள்:
ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ஒரு நோய்.எனவே, நாம், நமது உடல், நமது சுற்றுப்புறம் ஆகிய எல்லாமே  காரணமாகலாம்.எனினும் பொது வானகாரணங்கள்
  • மூளையில் ஏற்படும்  இரசாயன மாறுதல்களினால் அல்லது இரசாயனக் குறைபாடுகளால் ஏற்படலாம்.
  • பரம்பரையாக வருவது
  • மன ரீதியான அழுத்தம் காரணமாக ஏற்படுவது, குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் பெரியவர்களானதும் நோயாக மாறலாம்.
  • சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை நேரில் பார்ப்பது , சாதி சமய சண்டைகளை நேரில் காண்பது போன்ற சமூக புறக் காரணிகளாலும் ஏற்படுகிறது.
  • தனக்கு நெருங்கியவர் தன் கண் முன்னே விபத்தில் இறந்து போவதுபோன்ற அதிர்ச்சி கரமான சம்பவங்களினாலும் ஏற்படலாம்
  • எப்போதோ தலையில் அடிபட்டது நாள் பட நாள்பட நோயாக உருமாறலாம்.
குணப்படுத்தும் முறைகள்
இது ஒரு மன நோய். எனவே ஒருதேர்ந்த மனநல மருத்துவரால் மட்டுமே குணப்படுத்த முடியும். மருத்துவரின்வழிகாட்டுதலின் படி மருந்துகள் தரப்பட வேண்டும். தொடர்ச்சியான மருத்துவகண்காணிப்பில் இருக்க வேண்டும்.
தவிரவும் மனநலம் சார்ந்ததொடர்ச்சியான Psycho Therapy  எனப்படும் மனநல சிகிச்சை முறை மூலம் குணப்படுத்தலாம். இந்த இரு வகையான சிகிச்சை முறைகளையும், நோயின் தன்மையை அறிந்துமருத்துவர் அளிப்பார்.
டிப்ரஷன் வராமல் நம்மால் தடுக்கமுடியாது. சர்க்கரை வியாதி போலவோ அல்லது இருதய நோய் போலவோ இதற்கு தடுப்புமுறைகள் கிடையாது. 
எனினும் சில நியமங்களை தொடர்ந்து கடை பிடிப்பதின் மூலம்நாம் நமது இயல்பான மன நிலையை பராமரிக்க முடியும்.
  1. தினந்தோறும் உடற்பயற்சி செய்யுங்கள்
  2. சமச்சீரான உணவு உட்கொள்ளும் முறையை ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள்
  3. முறையான நேரத்தில்உணவு உட்கொள்ளுங்கள்
  4. ஆரோக்கியமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மனதார ஈடுபடுத்திக் கொண்டு மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.
  5. நமது அன்றாட நடவடிக்கைகளிலும் கூட திட்டமிட்டு பதறாமல் வேலை செய்ய பழகிக் கொள்ளுங்கள்
  6. ஏதாவது சமூக சேவையில் உ ங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு விதமான மன நிறைவைத் தரும்.
  7. உங்களின் நம்பிக்கையான நபர் அல்லது நபர்களிடம் உங்கள் மன எண்ணங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்.
  8. மிதமான அளவில் அடிக்கடி உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.
istock

0 comments:

கருத்துரையிடுக