நல்லாப் படிங்க! நிறைய மார்க் வாங்குங்க!!
உடம்பையும் மனசையும் நல்லா வச்சிக்குங்க
டாக்டர் சொல்றதையும் கேட்டுக்குங்க!!
ஹாய் +2 ஸ்டூடண்ட்ஸ்.! தேர்வு நாள் நெருங்கப் போகுது. கடந்த ஒரு வருஷமாப் படிப்பு படிப்புன்னு ஒரே டென்சனா இருப்பீங்க. கவலைப் படாதீங்க. நம்ம மனசையும் உடம்பையும் நல்லா வச்சிக்கிட்டாலே நமக்கு பாதி டென்சன் போயிரும். நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் தேவையான அளவு தூக்கம் இருந்தாலே நாம நம்ம இலக்கை ஈஸியா அடைஞ்சிடலாம்.

Ashvitha Child Care Clinic,
18,Periyar Nagar,
Masakalipalayam,
Coimbatore – 641 015
Ph: 98654 25037
18,Periyar Nagar,
Masakalipalayam,
Coimbatore – 641 015
Ph: 98654 25037
அவங்க சொல்றதைக் கேளுங்க.
டாக்டர், நல்லாப் படிக்கிறதுக்கும் உடல் நலத்திற்கும் சம்பந்தம் உண்டா?

சுறுசுறுப்பு,
விழிப்புணர்வு,
கவனிக்கும் தன்மை,
மனப்பாடம் செய்யும் திறமை,
பாட சம்பந்தமான விஷயங்களை அலசி புரிந்து கொள்ளும் தன்மை,
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன்.
விழிப்புணர்வு,
கவனிக்கும் தன்மை,
மனப்பாடம் செய்யும் திறமை,
பாட சம்பந்தமான விஷயங்களை அலசி புரிந்து கொள்ளும் தன்மை,
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன்.
போன்றவைகளை ஊக்குவிப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவும், முறையான உடற்பயிற்சியும் அடிப்படையாகும். எனவே, நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுங்கள்.
டாக்டர், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

சரிவிகித உணவு இல்லாதபோதும் கற்றலில் குறைபாடு ஏற்படலாம். சரிவிகித உணவை மேற்கொள்வதற்கு பழங்கள், காய்கறிகள், கீரைகள், பால் தயிர், மோர் போன்ற பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் விட்டமின் A, B6,B12,C போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் போன்ற உணவுகள் மந்தமான நிலையை (Tardiness) மாற்றி நம்மை சுறுசுறுப்புடன் பணியாற்ற உதவி செய்யும்.
எக்காரணம் கொண்டும் பசியோடு இருக்காதீர்கள்.
டாக்டர், உடற்பயிற்சி பற்றிக் கூறினீர்கள். தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் எவ்வாறு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது? உடற்பயிற்சி செய்யும் போது களைப்பாய் வேறு இருக்கும் அல்லவா?

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் அதை நிறுத்த வேண்டாம். தற்போது பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தடகளப்போட்டி அல்லது நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதை நிறுத்த வேண்டாம்.
உடற்பயிற்சி நமக்கு கல்வி சம்பந்தமான நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.
டாக்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?

டாக்டர், தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு பொதுவான அறிவுரைகள் என்னென்ன?

டீ, காபி அதிகம் சாப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக கால் டம்ளர் பாலுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் கலந்து சூடாக அருந்தலாம்.பீடி, சிகரெட், பான்பராக், மது வகைகள் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் உபயோகப்படுத்த வேண்டாம். அவற்றைத் தொட்டுக் கூட பார்க்காதீர்கள். அவற்றின் அருகிலேயே கூட போக வேண்டாம்.குட் லக்
- எக்காரணம் கொண்டும் பசியோடு இருக்காதீர்கள்.
- காலை உணவைத் தவிர்க்காதீர்கள்
- நிறைய பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
- நுண்ணூட்டச் சத்துக்களான விட்டமின்கள் மினரல்கள் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்
- அளவான முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
- உடற்பயிற்சி நமக்கு கல்வி சம்பந்தமான நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.
- ஆர்வத்துடன் படியுங்கள்
0 comments:
கருத்துரையிடுக