முகப்பு
உடல் நலம் என்பது மிகப் பெரிய சொத்து. ஆனால், இதன் அடிப்படை சோகம் என்னவெனில் ஆரோக்கியம் நம்மை விட்டு விலகும் போதுதான் அதனைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். எனவே நமது உடல் நலத்தினை பேணிகாப்பதன் பொருட்டு நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதிருக்கிறது.
இவ்வகையான நலம் சார்ந்த விழிப்புணர்வை நமது கோவை மக்களுக்கு வழங்குவதே "நலமான கோவை" யின் நல்நோக்கமாகும். இதன் பொருட்டு தகுந்த மருத்துவ அறிஞர்களின் துணையோடு, பல்வேறு ஊடகக் கருவிகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் வழங்க இருக்கிறோம். இந்நோக்கத்தை சரியான முறையில் எட்டும் பொருட்டு சமூக நலன்களை சந்தைபடுத்தும் அமைப்பு (Social Marketing Organisation)என்ற முறையில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் பல்வேறு காரணிகள் செயல்படுகின்றன.
- நமது உணவுப் பழக்கங்கள்
- நமது தினசரி வாழ்க்கை முறை
- நமது சுற்றுசூழல்
இதுவரையிலான எமது களப்பணிகளில் நாம் இரு விஷயங்களை அவதானித்திருக்கிறோம். ஒன்று நோயைப் பற்றி ஒன்றுமே அறியாமல் இருப்பது. மற்றொன்று தேவையற்ற மருத்துவ அறிவு. எனவே, இவ்விரு விஷயங்களையும் மனதில் கொண்டு தகுதி வாய்ந்த மருத்துவ வல்லுனர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் இவ்வலைப் பூவில் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். தவிரவும், பல்வேறு விதமான திட்ட முறைமைகளையும் (Strategies) நெறிப்படுத்தவும் விழைகிறோம்.
இதன் பொருட்டு தங்களின் மேலான கருத்துகளை nalamanacovai@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தங்களின் ஆலோசனைகளையும், ஆதரவையும் விரும்புகிறோம்.
மிக முக்கியம்: இவ்வலைப் பூவில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் விழிப்புணர்வு நோக்கம் பற்றியதாகும். எனினும், ஒவ்வொருவருடைய வயது, பாலினம், அவர்தம் மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை போன்றவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவித மருத்துவ முடிவு எடுக்கும் முன்பும் தங்களின் மருத்துவர் ஆலோசனையின்றி எடுக்க வேண்டாம். எக்காரணம் கொண்டும் சுய மருத்துவம் புரியாதீர்கள்.தங்களின் உடல் நலனை தங்களின் மருத்துவர் நன்கறிவார்.
0 comments:
கருத்துரையிடுக