சனி, டிசம்பர் 27, 2014

தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் பிரச்சினை அல்ல.அது ஒரு சமூகப் பிரச்சினை.இதைப் பற்றி மன நல நிபுணர் டாக்டர் K.மாரிக்கண்ணன் M.B.B.S.,M.D(Psychiatry) அவர்களிடமும் , அவர்தம் மனநல ஆலோசகர் குழுவிடமும் பேசினோம்.அதிலிருந்து,
டாக்டர் K.மாரிக்கண்ணன் M.B.B.S.,M.D(Psychiatry) அவர்கள் கோவை , சாய்பாபா காலனியில், ஸ்ரீ கண்ணா மருத்துவமனையை நிறுவி, மன நலம் சம்பந்தமான  சிகிச்சை முறைகளைத் திறம்பட புரிந்து வருகிறார்.
மேலும் தொடர்புக்கு,
170, பழனிச்சாமி வீதி,
2வது தெரு, N.S.R.ரோடு, K.K.புதூர்,
சாய்பாபா காலனி, கோவை -11.
(புளியமரம் பஸ் ஸ்டாப் பின்புறம்)

fallingஉலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது தற்கொலை இந்த தற்கொலைகள் என்பது முந்தைய காலகட்டங்களில் போர்களில் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதிரிகளை அழித்தொழிப்பதற்காக தற்கொலை படைகள் இருந்து வந்தன இவை தியாகமாக கருதப்பட்டன .அதற்கு பிந்தையகாலங்களில் கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது இது கட்டாயத்தின் அடிப்படையிலும், பெண்கள் அவர்களாகவும் உடன்கட்டை ஏறும் மூடநம்பிக்கையான தற்கொலை வழக்கமும் இருந்து வந்துள்ளது.தற்போதைய காலத்தில் தற்கொலை  என்பது மன அழுத்தத்தினாலும், அடிப்படை குணாதியசங்களாலும் தற்கொலைகள் நடந்து கொண்டுள்ளன . இன்று மற்றவர்களால் கொலை செய்யப்படுவதை காட்டிலும் மூன்று மடங்கு தற்கொலைகள் அதிகமாகியுள்ளன.தனது பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு தற்கொலை தான் என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கு 10.3 % பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தி லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழ் கூறுகின்றது .
தற்கொலை:
ஒரு உள்நோக்க்த்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல் தற்கொலை ஆகும் .
தற்கொலைக்கான காரணங்கள் :
1.சமிபத்தில் ஏற்ப்பட்ட சில துயர சம்பவங்களால் ஏற்படும் துக்கம் .
2.தோல்விகளை எதிர்கொள்ள தெரியாமை ,
3. மற்றவர்களுடன் நெருங்கி பழகாமல் தனிமையில் இருப்பவர்கள்.
4. அதிகமாக போதைப் பொருள்கள் பயன்படுத்துவர்கள்
5.உடல் ஊனத்தின் காரணமாக ஏற்படும் மன வேதனை
6 வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல்
இருத்தல்
7.அதிகமாக உணர்ச்சி வயப்படுவது
8.அழுது கொண்டே இருப்பது
9.மற்றவர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது
10.தாழ்வு மனப்பான்மையின் காரணமாக
11.குற்றவுணர்ச்சியின் விளைவாக
12.பாலியல் பிரச்சனைகள் மற்றும் காதல் தோல்வி
13.எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருப்பது
14.பொருளாதார பிரச்னைகளால்
15.மற்றவர்கள் தன்னை அங்கீகரிக்கவிட்டால்
16.கடன் தொல்லையால்
17.தேர்வில் தோல்வி
18.குழந்தை வளர்ப்பு முறை
19.கணவன் மனைவியை சந்தேகப்படுவதால்
20.நோய் அல்லது உடல் வலியால்

உடலியல் ரீதியான காரணங்கள் :
suicide_drugசெரட்டோனின் என்பது மூளையில் செய்திகளை கடத்தக் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். தற்கொலை முயற்சி செய்தவர்களை ஆராய்ச்சி செய்ததில் இந்த செரட்டோனின் என்ற வேதிப் பொருள் குறைந்த அளவே காணப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது செரட்டோனின் அளவு மிக மிக குறைந்த அளவே இருந்துள்ளது என்பதை பேராசிரியரும் மனநல மருத்துவருமான J. ஜான்மேன் M.D அவர்களின் ஆய்வில் தெரிவித்துள்ளார்.(நியூயார்க்,அமெரிக்கா)
தடுக்கும் வழிகள்
preventing1.மனநல மருத்துவரை ஆலோசித்து மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்.
2.குழந்தையிலிருந்தே தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம்
3.அடிப்படை குணாதிசியத்தை மாற்றுதல்
4.மன தைரியத்தை அதிகப்படுத்துதல்
5.தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருத்தல்
6.அவர்களிடம் இருக்கும் வேறு சிறப்புகளை கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்துதல்
7.பள்ளி, கல்லூரி, மற்றும் பணிமனைகளில் ஆற்றுபடுத்துதல் (Counselling Team)
குழுவை ஏற்படுத்த வேண்டும் இக்குழுவின் நோக்கமானது தற்கொலை சிந்தனையுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்
தற்கொலை சிந்தனைகள் உள்ளவர்களை கண்டறிவது எப்படி?
notesஒவ்வொருவரின் நடத்தை குணநலன்களை உற்று கவனிக்க வேண்டும்.அப்போது சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள் , உதாரணமாக மனக்கவலை, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
  • இவர்களை கண்டறிந்து முதலில் இவர்களின் முழுத் தகவல்களை (Case History) பெற வேண்டும்.இவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளை இவர்களின் பெற்றோர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்து அதற்கான சரியான தீர்வுகளை வழங்க வேண்டும்.
  • தற்கொலை சிந்தனையுடையவர்களுக்கு தனி நபர் ஆலோசனை வழங்க வேண்டும்.
  • அடிப்படை குணாதிசியத்தை மாற்றுவதற்கான பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும்.
  • இதில் பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதினால் தோல்வியை சந்திக்கவிடாமல் வளர்க்கின்றனர், பிற்காலத்தில் தோல்வி வரும் பொழுது (உதாரணமாக, தேர்வில்,தொழில்,காதல்) அதை எதிர்த்து சமாளிக்க முடியாமல் தற்கொலை சிந்தனைக்கு தள்ளபடுகிறார்கள். அதனால் குழந்தையில் இருந்தே தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கை வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக