சனி, டிசம்பர் 27, 2014



நல்லாப் படிங்க! நிறைய மார்க் வாங்குங்க!!
உடம்பையும் மனசையும் நல்லா வச்சிக்குங்க
டாக்டர் சொல்றதையும் கேட்டுக்குங்க!!

ஹாய் +2 ஸ்டூடண்ட்ஸ்.! தேர்வு நாள் நெருங்கப் போகுது. கடந்த ஒரு வருஷமாப் படிப்பு படிப்புன்னு ஒரே டென்சனா இருப்பீங்க. கவலைப் படாதீங்க. நம்ம மனசையும் உடம்பையும் நல்லா வச்சிக்கிட்டாலே நமக்கு பாதி டென்சன் போயிரும். நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் தேவையான அளவு தூக்கம் இருந்தாலே நாம நம்ம இலக்கை ஈஸியா அடைஞ்சிடலாம்.
venkatநல்லாப் படிச்சு நிறைய மார்க் வாங்கறத்துக்கும் நல்லா ஹெல்த்தியா இருக்கிறத்துக்கும் நிறைய தொடர்பு இருக்குன்னு டாக்டர்கள்ளாம் சொல்றாங்க. இதப் பத்தி நாம மேலும் தெரிஞ்சுக்கிறத்துக்காக குழந்தைகள் நல சிறப்பு நிபுணர் டாக்டர். திரு.P.வெங்கடேஷ்வரன் MBBS., MD (PED) அவங்க கிட்ட கேக்கலாம். டாக்டர்.திரு.P.வெங்கடேஷ்வரன் M.B.,B.S.,M.D. (PED) தனது MBBS கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றவர். குழந்தைகள் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பாக MD பட்டத்தை சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்றார். தற்போது கோவை PSG மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் நலப் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். 12 வருடங்களுக்கும் மேலாக மருத்துவப் பணியாற்றி வருகிறார். மேலும் தொடர்புக்கு:
Ashvitha Child Care Clinic,
18,Periyar Nagar,
Masakalipalayam,
Coimbatore – 641 015
Ph: 98654 25037

அவங்க சொல்றதைக் கேளுங்க.
டாக்டர், நல்லாப் படிக்கிறதுக்கும் உடல் நலத்திற்கும் சம்பந்தம் உண்டா?
Student-Studyingநல்லா ஆரோக்கியமா இருக்கிறவங்க நல்லாப் படிக்கிறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கிறது. அதுவும் நாம் இப்ப சொல்லப் போவது +2 மாணவ மாணவியர்களை மையமாக வைத்துத் தான். ஏனென்றால் அவர்கள்தான் தங்களுடைய வாழ்வின் மிக முக்கியமான தேர்வை எழுதப் போகிறார்கள். டியர் ஸ்டூடண்ட்ஸ், நல்லாப் படிச்சு நிறைய மார்க் வாங்க வேண்டுமென்றால் அதற்கு முழு முதல் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான உடலும் மனமும் தான். சத்தான உணவும், முறையான உடற்பயிற்சியும் இதுக்குக் கண்டிப்பாக உதவும். நாம் நன்றாகக் கற்க வேண்டுவதற்கு அடிப்படைக் குணங்களான,
சுறுசுறுப்பு,
விழிப்புணர்வு,
கவனிக்கும் தன்மை,
மனப்பாடம் செய்யும் திறமை,
பாட சம்பந்தமான விஷயங்களை அலசி புரிந்து கொள்ளும் தன்மை,
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன்.
போன்றவைகளை ஊக்குவிப்பதற்கு நல்ல ஆரோக்கியமான உணவும், முறையான உடற்பயிற்சியும் அடிப்படையாகும். எனவே, நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்யுங்கள் அல்லது ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுங்கள்.
டாக்டர், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?
nutrientகாலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தித் திறன் குறைவு, மந்தமாக இருப்பது போன்ற உணர்வு போன்றவை ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பாடங்களைப் படிப்பதில் சிரமம், புரிந்து கொள்வதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
சரிவிகித உணவு இல்லாதபோதும் கற்றலில் குறைபாடு ஏற்படலாம். சரிவிகித உணவை மேற்கொள்வதற்கு பழங்கள், காய்கறிகள், கீரைகள், பால் தயிர், மோர் போன்ற பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் விட்டமின் A, B6,B12,C போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதைப் போன்ற உணவுகள் மந்தமான நிலையை (Tardiness) மாற்றி நம்மை சுறுசுறுப்புடன் பணியாற்ற உதவி செய்யும்.
எக்காரணம் கொண்டும் பசியோடு இருக்காதீர்கள்.

டாக்டர், உடற்பயிற்சி பற்றிக் கூறினீர்கள். தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் எவ்வாறு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது? உடற்பயிற்சி செய்யும் போது களைப்பாய் வேறு இருக்கும் அல்லவா?
Smiling young woman doing stretching exercise.உடற்பயிற்சி செய்யும் ஆரம்ப நாட்களில் களைப்பாய்த் தோன்றும். ஆனால், உடற்பயிற்சி செய்யும் குழந்தைகளின் கற்கும் திறன் உடற்பயிற்சி செய்யாத குழந்தைகளை விட அதிகமாய் உள்ளது. அவர்களின் ஞாபக சக்தி மேம்படுகிறது. ஆனால் அதன் பொருட்டு உடனே உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். இதுவரை உடற்பயிற்சியில் ஈடுபடாதவர்கள் தினசரி முக்கால் மணி நேரம் நடக்கலாம். அல்லது கிளாஸ் ரூம் இடைவேளையில் 5 லிருந்து 10 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம். யோகா, தியானம் போன்றவைகளில் ஈடுபடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் உடலை வருத்திக் கொண்டு தேவையற்ற வேலைகளைச் செய்ய வேண்டாம்.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் அதை நிறுத்த வேண்டாம். தற்போது பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தடகளப்போட்டி அல்லது நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அதை நிறுத்த வேண்டாம்.
உடற்பயிற்சி நமக்கு கல்வி சம்பந்தமான நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.

டாக்டர், ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?
images (7)நல்ல ஆரோக்கியமான மனதிற்கும் உடலுக்கும் தூக்கம் அவசியம். 15 – 18 வயது வரையுள்ள குழந்தைகள் கண்டிப்பாக 8 மணியிலிருந்து 9 மணி நேரம் தூங்க வேண்டும். நீங்கள் வேண்டுமானால் அரை மணி நேரம் குறைவாகத் தூங்குங்கள் அதுவும் தேர்வுக்கு பத்து நாட்கள் முன்பு. உடலை வருத்திக் கொண்டு தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டாம். குறைவான நேரம் தூங்கும் போது களைப்பு அதிகமாய் இருக்கும். உங்கள் ஞாபக சக்தி பாதிக்கப்படும். கவனிக்கும் திறன் குறையும். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எவ்வளவு கவனத்துடன், ஆர்வத்துடன் படிக்கிறோம் என்பதே முக்கியம்.
டாக்டர், தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு பொதுவான அறிவுரைகள் என்னென்ன?
mmcமுக்கியமாய் நான் சொல்ல விரும்புவது என்னவெனில், நல்ல முறையில் கல்வி கற்று தேர்வில் நன்கு தேர்ச்சி பெற நல்ல உடல் நலமும் மனமும் மிக முக்கியம் என்பதே.பெண் குழந்தைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக குறைவாகச் சாப்பிடுவார்கள். குறைவாகச் சாப்பிடுவதற்கும் ஒல்லியாக இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறைவாகச் சாப்பிடுவதால் உங்களுக்கு தேவையான அளவு ஊட்டச் சத்து கிடைக்காமல் போகலாம். இது உங்கள் கற்கும் ஆற்றலைக் குறைக்கும்.
டீ, காபி அதிகம் சாப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக கால் டம்ளர் பாலுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் கலந்து சூடாக அருந்தலாம்.பீடி, சிகரெட், பான்பராக், மது வகைகள் போன்றவைகளை எக்காரணம் கொண்டும் உபயோகப்படுத்த வேண்டாம். அவற்றைத் தொட்டுக் கூட பார்க்காதீர்கள். அவற்றின் அருகிலேயே கூட போக வேண்டாம்.குட் லக்
  • எக்காரணம் கொண்டும் பசியோடு இருக்காதீர்கள்.
  • காலை உணவைத் தவிர்க்காதீர்கள்
  • நிறைய பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
  • நுண்ணூட்டச் சத்துக்களான விட்டமின்கள் மினரல்கள் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்
  • அளவான முறையான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
  • உடற்பயிற்சி நமக்கு கல்வி சம்பந்தமான நிறைய நன்மைகளை ஏற்படுத்தும்.
  • ஆர்வத்துடன் படியுங்கள்
தற்கொலை என்பது ஒரு தனிமனிதனின் பிரச்சினை அல்ல.அது ஒரு சமூகப் பிரச்சினை.இதைப் பற்றி மன நல நிபுணர் டாக்டர் K.மாரிக்கண்ணன் M.B.B.S.,M.D(Psychiatry) அவர்களிடமும் , அவர்தம் மனநல ஆலோசகர் குழுவிடமும் பேசினோம்.அதிலிருந்து,
டாக்டர் K.மாரிக்கண்ணன் M.B.B.S.,M.D(Psychiatry) அவர்கள் கோவை , சாய்பாபா காலனியில், ஸ்ரீ கண்ணா மருத்துவமனையை நிறுவி, மன நலம் சம்பந்தமான  சிகிச்சை முறைகளைத் திறம்பட புரிந்து வருகிறார்.
மேலும் தொடர்புக்கு,
170, பழனிச்சாமி வீதி,
2வது தெரு, N.S.R.ரோடு, K.K.புதூர்,
சாய்பாபா காலனி, கோவை -11.
(புளியமரம் பஸ் ஸ்டாப் பின்புறம்)

fallingஉலகளாவிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது தற்கொலை இந்த தற்கொலைகள் என்பது முந்தைய காலகட்டங்களில் போர்களில் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதிரிகளை அழித்தொழிப்பதற்காக தற்கொலை படைகள் இருந்து வந்தன இவை தியாகமாக கருதப்பட்டன .அதற்கு பிந்தையகாலங்களில் கணவன் இறந்து விட்டால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது இது கட்டாயத்தின் அடிப்படையிலும், பெண்கள் அவர்களாகவும் உடன்கட்டை ஏறும் மூடநம்பிக்கையான தற்கொலை வழக்கமும் இருந்து வந்துள்ளது.தற்போதைய காலத்தில் தற்கொலை  என்பது மன அழுத்தத்தினாலும், அடிப்படை குணாதியசங்களாலும் தற்கொலைகள் நடந்து கொண்டுள்ளன . இன்று மற்றவர்களால் கொலை செய்யப்படுவதை காட்டிலும் மூன்று மடங்கு தற்கொலைகள் அதிகமாகியுள்ளன.தனது பிரச்சனைகளுக்கான ஒரே தீர்வு தற்கொலை தான் என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கு 10.3 % பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தி லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழ் கூறுகின்றது .
தற்கொலை:
ஒரு உள்நோக்க்த்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல் தற்கொலை ஆகும் .
தற்கொலைக்கான காரணங்கள் :
1.சமிபத்தில் ஏற்ப்பட்ட சில துயர சம்பவங்களால் ஏற்படும் துக்கம் .
2.தோல்விகளை எதிர்கொள்ள தெரியாமை ,
3. மற்றவர்களுடன் நெருங்கி பழகாமல் தனிமையில் இருப்பவர்கள்.
4. அதிகமாக போதைப் பொருள்கள் பயன்படுத்துவர்கள்
5.உடல் ஊனத்தின் காரணமாக ஏற்படும் மன வேதனை
6 வாழ்க்கையில் எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல்
இருத்தல்
7.அதிகமாக உணர்ச்சி வயப்படுவது
8.அழுது கொண்டே இருப்பது
9.மற்றவர்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருப்பது
10.தாழ்வு மனப்பான்மையின் காரணமாக
11.குற்றவுணர்ச்சியின் விளைவாக
12.பாலியல் பிரச்சனைகள் மற்றும் காதல் தோல்வி
13.எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருப்பது
14.பொருளாதார பிரச்னைகளால்
15.மற்றவர்கள் தன்னை அங்கீகரிக்கவிட்டால்
16.கடன் தொல்லையால்
17.தேர்வில் தோல்வி
18.குழந்தை வளர்ப்பு முறை
19.கணவன் மனைவியை சந்தேகப்படுவதால்
20.நோய் அல்லது உடல் வலியால்

உடலியல் ரீதியான காரணங்கள் :
suicide_drugசெரட்டோனின் என்பது மூளையில் செய்திகளை கடத்தக் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். தற்கொலை முயற்சி செய்தவர்களை ஆராய்ச்சி செய்ததில் இந்த செரட்டோனின் என்ற வேதிப் பொருள் குறைந்த அளவே காணப்படுகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்தும் போது செரட்டோனின் அளவு மிக மிக குறைந்த அளவே இருந்துள்ளது என்பதை பேராசிரியரும் மனநல மருத்துவருமான J. ஜான்மேன் M.D அவர்களின் ஆய்வில் தெரிவித்துள்ளார்.(நியூயார்க்,அமெரிக்கா)
தடுக்கும் வழிகள்
preventing1.மனநல மருத்துவரை ஆலோசித்து மருந்துகள் மூலம் தற்கொலை எண்ணங்களை கட்டுப்படுத்தலாம்.
2.குழந்தையிலிருந்தே தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கை வளர்ப்பதன் மூலம்
3.அடிப்படை குணாதிசியத்தை மாற்றுதல்
4.மன தைரியத்தை அதிகப்படுத்துதல்
5.தனிமையைத் தவிர்த்து நண்பர்களுடன் இருத்தல்
6.அவர்களிடம் இருக்கும் வேறு சிறப்புகளை கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்துதல்
7.பள்ளி, கல்லூரி, மற்றும் பணிமனைகளில் ஆற்றுபடுத்துதல் (Counselling Team)
குழுவை ஏற்படுத்த வேண்டும் இக்குழுவின் நோக்கமானது தற்கொலை சிந்தனையுடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வராமல் தடுப்பதே இக்குழுவின் நோக்கமாகும்
தற்கொலை சிந்தனைகள் உள்ளவர்களை கண்டறிவது எப்படி?
notesஒவ்வொருவரின் நடத்தை குணநலன்களை உற்று கவனிக்க வேண்டும்.அப்போது சாதாரண மனநிலையில் இருப்பவர்களை விடவும் இவர்கள் வேறுபட்டு காணப்படுவார்கள் , உதாரணமாக மனக்கவலை, தாழ்வு மனப்பான்மை, மற்றவர்களை சார்ந்திருப்பவர்கள் இவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
  • இவர்களை கண்டறிந்து முதலில் இவர்களின் முழுத் தகவல்களை (Case History) பெற வேண்டும்.இவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளை இவர்களின் பெற்றோர்களிடமும், குடும்பத்தினரிடமும் கேட்டறிந்து அதற்கான சரியான தீர்வுகளை வழங்க வேண்டும்.
  • தற்கொலை சிந்தனையுடையவர்களுக்கு தனி நபர் ஆலோசனை வழங்க வேண்டும்.
  • அடிப்படை குணாதிசியத்தை மாற்றுவதற்கான பயிற்சிகளை கற்றுத் தர வேண்டும்.
  • இதில் பெரும்பாலும் ஒற்றை குழந்தைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பதினால் தோல்வியை சந்திக்கவிடாமல் வளர்க்கின்றனர், பிற்காலத்தில் தோல்வி வரும் பொழுது (உதாரணமாக, தேர்வில்,தொழில்,காதல்) அதை எதிர்த்து சமாளிக்க முடியாமல் தற்கொலை சிந்தனைக்கு தள்ளபடுகிறார்கள். அதனால் குழந்தையில் இருந்தே தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கை வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள்.


செவித்திறன் இழப்பு (HEARING LOSS)

காதுல கொஞ்சம் (விஷயம்) போட்டுக்குங்க!
செவித்திறனைப் பாதுகாத்திடுங்க!!
டாக்டர் சொல்றதக் கேளுங்க!!!
நமக்கு காது கேட்பதில் குறைபாடு உள்ளதா அன்றி இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? கீழ்க்கண்ட கேள்விகளில் 3 கேள்விகளுக்கு ஆம் என்று சொன்னால் நீங்கள் உடனடியாக காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்தாலோசிப்பது நலம். 5 கேள்விகளுக்கு மேல் என்றால் நீங்கள் கட்டாயம் காது மூக்குத் தொண்டை மருத்துவரை அணுகியே ஆக வேண்டும்.
1. டெலிபோனில் பேசும்போது தெளிவாய்க் கேட்கிறதா?
2.சத்தமான சூழ்நிலையில் கேட்பதில் உங்களுக்குச் சிரமமாய் இருக்கிறதா?
3. இரண்டு மூன்று பேர் பேசும்போது புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறீர்களா?
4. மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறீர்களா?
5.மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது அவர்கள் முணுமுணுப்பதாகவோ அல்லது அவர்கள் தெளிவாய்ப் பேசவில்லை என்றோ உணர்கிறீர்களா?
6. மற்றவர்கள் பேசுவதைத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்களா அல்லது சம்பந்தமில்லாமல் பதிலளிக்கிறீர்களா?
7.மற்றவர்கள் உங்களிடம் பேசும்போது திரும்பக் கூறும்படி அடிக்கடி கேட்கிறீர்களா?
8.பெண்களும், குழந்தைகளும் பேசும்போது உங்களால் தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறதா?
9. நீங்கள் TV வால்யூமை அதிகமாய் வைக்கிறீர்கள் என்று மற்றவர்கள், குறிப்பாக உங்கள் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்களா?
10. தங்களுக்கு அடிக்கடி மணியடிப்பது போலவோ, உறுமும் சப்தமோ, கிளிக்,கிளிக் என்ற சத்தமோ உஸ்ஸ் என்ற சத்தமோ இரைச்சலான சத்த்மோ கேட்கிறதா?
11. சில சத்தங்கள் பலமாய்க் கேட்கிறதா?

hearing_lossசெவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடாகும். இதற்கு நமது சூழல், நமது வாழ்க்கை முறை, பரம்பரைக் காரணங்கள், நெருங்கிய உறவில் திருமணம் செய்வது போன்றவை காரணமாகின்றன. பிறவிக் குறைபாடுகளில் இது முதலிடம் வகிக்கிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவைகளைவிட இது 3 மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுக்க 25 லிருந்து 30 கோடிப் பேர் ஏதாவது ஒரு வகையில் காது சம்பந்தமான நோயினால் அவதிப்படுகிறார்கள்.
நமது நாட்டைப் பொறுத்தவரை, சரியான புள்ளி விவரங்கள் இல்லாத நிலையிலும், குறைந்த பட்சம் 8 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 12 ல் ஒரு இந்தியர் செவித்திறன் இழப்பினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைகளைப் பொறுத்த வரையில் நமது நாட்டில் இது சற்றே ” சீரியசான மேட்டர்”. ஏனெனில், கடந்த 2000ல் 1000 குழந்தைகளுக்கு ஒருவர் என்றிருந்த நிலை மாறி தற்போது 1000 குழந்தைகளுக்கு 6 பேர் என்றளவில் உயர்ந்துள்ளது.
ஆனால், காது சம்பந்தமான நோய்களைப் பற்றி நாம் அவ்வளவாக கவனத்தில் கொள்வதில்லை. காது சம்பந்தமான நோய் என்றால் நம்மில் பெரும்பாலோனர் ” செவிட்டுத் தன்மை” (COMPLETE DEAF) என்பதாகப் பொருள் கொள்கிறோம். காது கேட்பதில் குறைபாடு என்பதற்கும், செவிட்டுத் தன்மை என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காது கேட்பதில் குறைபாடு என்பது மிதமான குறைபாடு (MILD) என்பதிலிருந்து, தீவிரமான குறைபாடு (SEVERE) என்பது வரை பல்வேறு நிலைகளைக் கொண்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலமும், காது கேட்புக் கருவிகள் மூலமும் இதை சரிசெய்ய முடியும் அல்லது காது கேட்கும் திறனை ஓரளவு மேம்படுத்த முடியும். ஆனால், செவிட்டுத்தன்மை என்பது முழுவதும் காது கேட்காத நிலையைக் குறிப்பதாகும்.
காது கேளாமை அல்லது குறைவாகக் காது கேட்பது என்பது சமூக ரீதியில் நாம் இயங்குவதைத் தடை செய்கிறது. காது கேளாத ஒரு நபருடன் நாம் ஏற்படுத்தும் உரையாடல் நமக்கு எரிச்சலைக் கூட ஏற்படுத்தலாம். அவரின் நிலையில் நம்மை வைத்துப் பாருங்கள்: அதன் தீவிரம் புரியும்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், ஒரு முறை நமது காது கேட்கும் திறன் போய்விட்டால் பிறகு போனது போனதுதான் நம்மால் அதை மீட்கவே முடியாது.

எனவே, இது சம்பந்தமாக மேலும் தெளிவு பெற காது, மூக்குத் தொண்டை நிபுணர் டாக்டர்.
K. பாலகிருஷ்ணன் M.B.,B.S., MS(ENT), DNB, FRCS (Glasgow), FRCS (ORL-HNS)அவர்களிடம் காது சம்பந்தமான கேள்விகளைத் தொடுத்தோம்.
DRடாக்டர். K. பாலகிருஷ்ணன் அவர்கள் தமது MBBS கல்வியை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். காது மூக்குத் தொண்டைக்கான பட்ட மேற்படிப்பை (MS) பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். மேலும், காது மூக்குத் தொண்டைப் பிரிவில் “டெல்லி நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாம்” கல்வி நிறுவனத்தின் பட்டயமும் பெற்றவர். தவிரவும், ” ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (Glasgow) ” என்ற உலகப் புகழ் பெற்ற மருத்துவ நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் (FELLOW MEMBER) என்ற அந்தஸ்தையும் பெற்றவர். காது மூக்குத் தொண்டைப் பிரிவில் சிறப்புத் தகுதியாக FRCS(ORL-HNS) பட்டயமும் பெற்றவர். 15 வருடங்களுக்கும் மேலாக லண்டன் மாநகரில் பணியாற்றியவர். காது மூக்குத் தொண்டை பிரிவில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவமும் ஆழ்ந்த அறிவும் பெற்றவர்.
மேலும்
தொடர்புக்கு,
Dr.K.Balakrishnan
M.B.,B.S., MS(ENT), DNB, FRCS (Glasgow), FRCS (ORL-HNS)
Consultant ENT, Head & Neck Surgeon
Global Hospital
Ram Nagar
Coimbatore – 641 009
Phone Number : +91  8098 948 588
Email-Id: dr.kbalakrishnan.ent@gmail.com

அவரிடம் பேசியதிலிருந்து:
டாக்டர், செவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய விஷயமா என்ன?
hearing_boardஉண்மையில் காது மற்றும் காது சம்பந்தமான நோய்கள், காது சம்பந்தமாக நாம் செய்ய வேண்டிய பரிசோதனைகள் போன்றவற்றில் நாம் அக்கறை செலுத்துவதிலலை. நமது காது மிகவும் நுண்ணிய முறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. காது மிகவும் ” சென்சிடிவ்வான” உறுப்பு.. காதிற்குள் கண்டதையும் நுழைத்தல், சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஹேர்பின், பின்னூசி, தீக்குச்சி போன்ற பொருட்களை வைத்துக் குடைவது என்று நாம் நம் காதைப் பாடாய் படுத்துகிறோம். போதும் போதாததிற்கு கடையில் விற்கும் கண்ட கண்ட சொட்டு மருந்துகளை காதில் வேறு ஊற்றுகிறோம். இது முழுக்க முழுக்க ஆபத்தான செயல்.
நமது காதுகள் கேட்கும் வேலையை மட்டும் செய்வதில்லை. நமது உடலை சம நிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. தலை சுற்றல் என்றால் நாம் பயந்து கொண்டு இரத்த அழுத்தம், இதய பரிசோதனை போன்றவைகளை செய்கிறோம். ஆனால், உண்மையில் தலை சுற்றல் ஏற்படுவதற்கு 80 சதவிகிதம் காதில் பிரச்சினையே.
குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை என்றால் அவர்களது பேச்சுத்திறன் பாதிக்கும். இது நாளடைவில் பேச்சுத்திறன் இழக்கும் நிலைக்கே கூட இட்டுச் செல்லும்.
டாக்டர், குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை என்பதை எவ்வாறு அறிவது? அதற்கு ஏதாவது பரிசோதனை முறைகள் உள்ளதா? அது என்ன, அவ்வளவு முக்கியமானதா என்ன?
earகாதைப் பற்றி நாம் சரிவர அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இந்தக் கேள்வி ஓர் உதாரணம்.
பிறவிக் குறைபாடுகளில் காது கேளாமை அல்லது செவித்திறன் பாதிப்பு முதலிடம் வகிக்கிறது. மற்ற பிறவிக் குறைபாடுகளுக்கும், பிறவியிலேயே காது சம்பந்தமான குறைபாடுகளுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. மற்ற பிறவிக் குறைபாடுகள் வெளிப்படையாய்த் தெரிபவை. எனவே, நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், காதுக் குறைபாடுகள் வெளியில் தெரிவதில்லை. நாமும் அதைப் பற்றி அவ்வளவாகக் கவனத்தில் கொள்வதில்லை. “எங்க பரம்பரையிலேயே இப்படித்தான். நான் நாலு வயசு வரைக்குங்கூட இப்படித்தான் இருந்தேன்” என்று எளிதாய் கூறிவிடுவார்கள். போதும் போதாததிற்கு ” காதில் அழுக்கு அடைச்சிருக்கும். கொஞ்சம் எண்ணெய் விட்டால் சரியாய்ப் போய்விடும்” என்று கண்ட கண்ட எண்ணெய்களையும் காதில் ஊற்றி விடுவார்கள்.
நம்முடைய அலட்சியத்தினாலும், பொறுப்பற்ற தன்மையினாலும், அறியாமையினாலும் பெறுதற்கரிய செவிச் செல்வத்தை இழக்க வேண்டாம்.கவனியுங்கள். இது ஒரு குழந்தையின் வாழ்நாள் பிரச்சனை.

குழந்தைகளுக்கு காது கேட்பதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை நாமாகவே முடிவு செய்யக் கூடாது. நீங்கள் நடந்து போகும் போது குழந்தை தலையைத் திருப்பலாம். அல்லது நீங்கள் கை சொடுக்கும் போதோ, கை தட்டும் போதோ கூட அது சத்தம் வந்த திசையைப் பார்க்கலாம். அதை வைத்து காது நன்றாகக் கேட்கிறது என்று நாம் முடிவு செய்யக்கூடாது. வெறும் அசைவுகளை கண்ணால் பார்த்துக் கூட தலையைத் திருப்பலாம். எனவே, காது சம்பந்தமான பரிசோதனையை ஒரு காது மூக்குத் தொண்டை நிபுணர்தான் சரியாக மேற்கொள்ள முடியும். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் அதற்கான பரிசோதனையைக் கட்டாயமாகச் செய்கிறார்கள். அவ்வாறு பரிசோதனை செய்யாத நிலையில் நாம் செய்து கொள்வது நல்லது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்குமே காது பரிசோதனைக் கட்டாயமாகும்.
இந்தப் பரிசோதனையை குழந்தை பிறந்த எவ்வளவு நாட்களுக்குள் செய்ய வேண்டும்?
child_prevent_from_hearing_lossஎவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து விடுங்கள். இது ஒன்றும் அவ்வளவு கடுமையான பரிசோதனை அல்ல. குழந்தையின் காது கேட்கும் திறன் சரியாக இருக்கும் பட்சத்தில் பத்து நிமிடங்களிலேயே முடிந்து விடும். பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து அதிகபட்சமாய் ஒரே நாளில் பரிசோதனை முடிந்து விடும்.
குழந்தைகளுக்கு காது கேட்புப் பரிசோதனை பேச்சு வருவதற்கு முன்பு, பேச்சு வருவதற்கு பின்பு என இரு வகைப் படும். பிறவியிலேயே ஏதாவது குறைபாடு இருந்தால் பேச்சுத்திறன் பாதிக்கக்கூடும். எனவே, சீக்கிரமே காது கேட்புப் பரிசோதனையை செய்து விடுங்கள்.
டாக்டர், பரிசோதனை முடிவிற்குப் பிறகு ஏதாவது பிரச்சினை என்றால், அதற்கான குணப்படுத்தும் முறைகள் என்னென்ன?
parisothanaiகாது கேட்புத் திறன் என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. மிகவும் மிதமான நிலையில் இருந்து (MILD) மிகக் கடுமையான நிலைவரை (SEVERE) என்று பல்வேறு நிலைகள் உள்ளன. மிகவும் ஆரம்ப நிலையில் (MILD) மருந்துகளின் மூலமே குணப்படுத்தி விடலாம். மிதமான குறைபாடு( MODERATE) எனில் “ஹியரிங் எய்டு” போன்ற கருவிகள் மூலம் சரி செய்யலாம். ஆனால், மிகவும் கடுமையான நிலை (SEVERE) எனில், “காக்ளியர் இம்ப்ளான்ட்” ஒன்றுதான் வழி. இதற்கு 8 லட்ச ரூபாயிலிருந்து 10 லட்ச ரூபாய் வரை செலவாகும். கவலைப் படாதீர்கள். குழந்தைகளுக்க்கான “காக்ளியர் இம்ப்ளான்ட்” சிகிச்சைக்கான செலவை நமது தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலுத்தி விடுகிறது.
டாக்டர், குழந்தைகளுக்கான செவித்திறன் இழப்பு பற்றிக் கூறினீர்கள். பெரியவர்களுக்கு செவித்திறன் பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
 say_againசெவித்திறன் இழப்பு (HEARING LOSS) என்பது 3 வழிகளில் ஏற்படலாம்.
1.நமது காது, சத்தங்களை சரிவர கிரகிக்கமுடியாததால் ஏற்படும் குறைபாடு. இதை நாங்கள் Conductive Hearing Loss என்கிறோம்.
2. உட்புறக் காது அமைப்பில் உள்ள குறைபாடுகளாலும், செவித்திறன் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் செவித்திறன் குறைபாடு ஏற்படலாம். இதை நாங்கள் SENSORI NEURAL HEARING LOSS என்கிறோம்.
3. மூன்றாவதாக, மேற்குறிப்பிட்ட இரு காரணங்களும் சேர்ந்து கூட நமது செவித்திறன் இழப்பிற்கு வழிவகுக்கும்.
I. Conductive Hearing Loss ஏற்படக் காரணங்கள்:
1. வெளிப்புறக்காது அல்லது காது குழாய் அல்லது உட்புறக்காது போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகள்
2. சளி அல்லது ஜலதோசம் போன்றவற்றால் நடுக்காதில் திரவம் நிறைந்திருத்தல்
3. அலர்ஜி
4. காது தொண்டைக் குழாயில் ஏற்படும் குறைபாடுகள்
5. செவிப்பறையில் ஏற்படும் பாதிப்புகள் உதாரணமாக, செவிப்பறையில் துளை ஏற்படுதல் போன்றவை
6. சிறு கட்டிகள் போன்றவை (BENINGN TUMORS)
7. காதில் குறும்பி சேர்தல் (மெழுகு போன்ற அழுக்கு)
8. காதுக் குழாயில் ஏற்படும் தொற்று நோய்கள்
9. பென்சில், சிறு துரும்பு போன்ற வேற்றுப் பொருள் (FOREIGN BODY) போன்றவை காதில் இருத்தல்
10. நடுக்காது எலும்பு வளர்வதால் ஏற்படும் பிரச்சினைகள்
II. இரண்டாவது வகை செவித்திறன் இழப்பு  உட்புறக் காது அமைப்பில் உள்ள குறைபாடுகளாலும், செவித்திறன் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படுவது. இந்த வகையான SENSORI NEURAL HEARING LOSS ஏற்பட நமது வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும். இதற்கான காரணங்கள்:
1. அதிகமான சத்தத்தில் வேலை செய்வது அல்லது அதிகமான சத்தத்தை எதிர்கொள்வது
2. தலையில் அடிபடுவதால்
3. சில குறிப்பிட்ட வைரஸ்களால்
4. நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போது
5. பரம்பரைக் காரணங்கள்
6. வயதாவதால்
7. உட்புறக் காதில் ஏற்படும் குறைபாடுகளால்
III. மூன்றாவதாக, மேற்குறிப்பிட்ட இரு காரணங்களும் சேர்ந்து கூட நமது செவித்திறன் இழப்பிற்கு வழி வகுக்கும்.
டாக்டர், செவித்திறன் இழப்பு (HEARING LOSS) ஏற்படுவதை எவ்வாறு தடுப்பது?
calculationஇதற்கு நாம் செய்யக்கூடியது என்பதைக் காட்டிலும் செய்யக்கூடாதது எது என்பதில்தான் அக்கறை கொள்ள வேண்டும். எனவே, செய்யக்கூடாதது எது என்பதைப் பார்ப்போம்.
1. காது மிகவும் நுண்ணிய உறுப்பு (SENSITIVE ORGAN) எனவே, டாக்டரின் அறிவுரை இல்லாமல் எதையும், குறிப்பாக சொட்டு மருந்துகள், காதினுள் ஊற்றாதீர்கள்.
2. குழந்தைகளுக்கு காதில் சீழ் வடிந்தால், டாக்டரின் அறிவுரையின் பேரிலேயே மருந்துகளைக் கொடுங்கள்.
3. காதிற்குள் தீக்குச்சி, பேனா முனை, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை விட்டுக் குடையாதீர்கள்
4. குழந்தைகளின் காதில் பென்சில் போன்றவை சிக்கிக் கொண்டால் நீங்களாகவே எடுக்க முயற்சிக்காதீர்கள். பொது மருத்துவரைக் காட்டிலும் காது மூக்குத் தொண்டை நிபுணரே இதற்குச் சிறந்தவர்.
5. வேறு ஏதாவது நோய்க்குச் சிகிச்சை எடுக்கும் போதுகூட அந்த சிகிச்சை முறை உங்கள் காதினைப் பாதிக்குமா என்று கேட்டுக் கொள்வது நல்லது.
6. கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் மருந்து சாப்பிடும்போதும், X-Ray, Scan எடுக்கும்போதும் அதைப் பற்றி உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
7. சத்தமான சூழ்நிலையில் வேலை செய்யும்போது காதிற்குக் கவசம் அணியுங்கள்.
8. சத்தங்களை திடீரென எதிர்கொள்ளும் போது கைகளால் காதுகளை அழுத்தமாக மூடிக் கொள்ளுங்கள்.
9. அதிக நேரம் இயர் போன்களில் பாட்டுக் கேட்பதைத் தவிருங்கள்.
டாக்டர், தற்போதைய சூழ் நிலையில் ” அதிக சத்தங்களால் காது கேட்புத் திறன் இழப்பு” ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதிகமான சத்தமான சூழ் நிலையில் இருந்தாலோ அல்லது வேலை செய்ய நேர்ந்தாலோ நமக்கு செவித்திறன் இழப்பு ஏற்படுமா? நாளடைவில் அந்த சத்தம் நமக்குப் பழகி விடாதா?
decible001கண்டிப்பாக அந்த சத்தம் பழகி விடும். ஆனால், செவிக்கு அந்த சத்தம் மிகுந்த அழுத்தத்தை (Stress)ஏற்படுத்தும். சத்தத்தின் அளவை அல்லது ஒலியின் அளவை நாம் டெஸிபலில் (Decibel) அளக்கிறோம். நாம் இரவில் அமைதியாகத் தூங்க 35 டெஸிபல் அளவு இருக்க வேண்டும். சராசரியாக நமது அறையில் சத்த அளவு 45 டெஸிபல் அளவில் இருக்கும். வாஷிங் மெஷின் சத்தம், சாதாரணமாக ஒருவர் நம்மிடம் பேசும்போது வெளிப்படும் சத்தம் போன்றவை 75 டெஸிபலைத் தாண்டாது. இந்த அளவில் நாம் 24 மணி நேரம் இருந்தால் கூட நமது கேட்கும் திறன் பாதிக்காது.
ஆனால் இதற்கு மேல் போகும்போது நாம் எவ்வளவு நேரம் அந்த சத்தத்தை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நமது செவித்திறன் பாதிக்கக்கூடும்.
உதாரணமாக நகரின் பிஸியான நேரத்தில் ஒலி அளவு 85 டெஸிபலாக இருக்கும். இந்தச் சூழ் நிலையில் 8 மணி நேரம் நாம் தொடர்ச்சியாக அந்த சத்தங்களை எதிர்கொள்ள நேர்ந்தால் நமது செவித்திறன் பாதிக்கக் கூடும். எனவே, சத்தமான சூழ் நிலையில் வேலை செய்ய நேர்ந்தால் கண்டிப்பாக காதிற்கு கவசம் அணிய வேண்டும்.
டாக்டர், காதினைப் பராமரிக்க அல்லது செவித்திறனைப் பாதுகாக்க நீங்கள் கூறும் பொதுவான அறிவுரைகள் என்னென்ன?
prevent_hear_lossசெவித்திறன் நமக்கு இயற்கை அளித்த கொடை. நமது அறியாமையினாலும், தவறான நம்பிக்கையினாலும், அலட்சியத்தினாலும் அத்திறனை இழக்க வேண்டாம். முக்கியமாக காதிற்குள் எதையும் நுழைக்க வேண்டாம். காதைச் சுத்தம் செய்கிறேன் என்று பட்ஸால் காதைக் குடைய வேண்டாம். உங்களது சுண்டு விரல் காதினுள் நுழையும் அளவிற்கு மெல்லிய துணியால் துடைத்து எடுங்கள். காது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் தன்மை கொண்டது. கண்ட கண்ட எண்ணெய்கள், மருந்துகள் ஊற்ற வேண்டாம்.
காது கேட்கும் திறன் ஒரு முறை போய்விட்டால் போனது போனதுதான். அதை உங்களால் மீட்டெடுக்கவே முடியாது.